தமிழ் நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமாக தயாராகியுள்ளது தலைவி திரைப்படம். இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவி திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சுவாமியும் மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர் எம் வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரகனியும் மேலும் பூர்ணா & மதுபாலா ஆகியோரும் நடித்துள்ளனர்.

முன்னதாக வெளியான தலைவி திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி தலைவி திரைப்படம்  திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் தற்போது தலைவி படத்தின் புதிய பாடல் வெளியானது.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையில் உந்தன் கண்களில் என்னடியோ என்னும் அழகான வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி அசத்தும் அழகான வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த அழகான பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.