தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் கயல் ஆனந்தி. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். கயல் படத்தில் அறிமுகமாகி, சண்டிவீரன், விசாரணை, ரூபாய், பண்டிகை, பரியேறும் பெருமாள் என தொடர்ந்து அசத்தினார். கடைசியாக இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தில் நடித்திருந்தார். 

KayalAnandhi KayalAnandhi

அறிமுக இயக்குனர் ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் கமலி from நடுக்காவேரி என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் ஒரு கல்லூரி மாணவியாக ஆனந்தி நடித்துள்ளார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீஸர் வெளியானது. தீனதயாளன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜெகதீசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

KayalAnandhi KayalAnandhi

தற்போது படத்திலிருந்து முன்னொரு நாளில் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. சக்திஸ்ரீ பாடிய இந்த பாடல் வரிகளை மதன் கார்கி எழுதியுள்ளார்.