உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இப்படத்திலும் கமல்ஹாசன் முதியவராகவும், இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ரத்னவேல் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். பிரபல நடிகர் அனில் கபூர் இப்படக்குழுவுடன் இணைந்தார். 

indian2

சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், வித்யுத் ஜம்வால் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் சென்னைக்கு வந்து கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி மேக்கப் டெஸ்ட் மற்றும் படம் எடுத்தனர். அந்த தோற்றம் இப்போதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் லுக் வெளியானது, சேனாபதியை மீண்டும் கண்ட ரசிகர்கள் தெம்புடன் வரவேற்றனர்.

kamalhaasan anilkapoor

ராஜமுந்திரியில் நடைபெற்ற படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த படக்குழுவினர் தற்போது ஜெய்பூர் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளுக்கு விரைய உள்ளனர். இந்த படப்பிடிப்பில் நடிகர் விவேக் கலந்துகொள்ளவிருக்கிறார் என்ற தகவலும் கலாட்டா செவிகளுக்கு எட்டியது.