எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன்.இவர் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளளார்.மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இவர்களுடன் நரைன்,அர்ஜுன் தாஸ்,காளிதாஸ் ஜெயராம்,காயத்ரி,பிக்பாஸ் ஷிவானி,மைனா,மஹேஸ்வரி VJ,ஸ்வாதிஷ்டா,ஸ்ரீகுமார் கணேஷ் என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தினை தமிழகத்தில் வெளியிடுகின்றனர்.இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுகளை அள்ளி வருகிறது.

இந்த படத்தின் முதல் பாடலான பத்தல பத்தல பாடலை கமல்ஹாசன் எழுதி பாடியிருந்தார்.இந்த பாடல் லிரிக் வீடியோ ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வந்தது.இந்த பாடல் தற்போது 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.