லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் விக்ரம்.ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கமலுடன் இணைந்து விஜய்சேதுபதி,பஹத் பாசில் என மேலும் 2 சூப்பர் நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.இவர்களுடன் சூர்யாவும் இணைந்து நடித்திருந்தார்.இந்த படம் பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தினை ரசிகர்கள் பெரிதளவு கொண்டாடி வருகின்றனர்.பல இடங்களில் இந்த படம் வசூல் சாதனை செய்து வருகிறது.பாண்டிச்சேரியில் இந்த படத்தின் காட்சி ஒன்று ஓடி வரும் திரையரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

பாண்டிச்சேரியில் உள்ள ஜெயா திரையரங்கத்தில் நேற்று நடைபெற்ற காட்சியில் மின்கசிவு காரணமாக திரை தீப்பிடித்துள்ளது.உடனடியாக ரசிகர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.இதுகுறித்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.