கவினின் அரையோடு கணக்கை தொடங்கும் கமல் !
By Aravind Selvam | Galatta | September 14, 2019 15:39 PM IST

சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் மே 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கமல் வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு உடனுக்குடன் விமர்சனம் கிடைப்பதில்லை அது அவர்களது குடும்பத்தினருக்கு தான் என்று தெரிவித்து எல்லோரையும் அறிமுகப்படுத்துகிறார்.சேரனுக்கு ஒரு ரகசிய அறையும்,கவினுக்கு ஒரு அரையும் கிடைத்தது என்று கூறுகிறார்.