உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிநடை போட்ட திரைப்படம் இந்தியன்.இந்த படத்தின் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.

Kamal Indian 2 Kajal Aggarwal Joins Shoot Shankar

இந்த படத்தையும் இயக்குனர் ஷங்கர் இயக்க கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிக்கிறார். விவேக், டெல்லி கணேஷ், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். 

Kamal Indian 2 Kajal Aggarwal Joins Shoot Shankar

அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங்கில் தற்போது இணைந்துள்ளதாக படத்தின் நாயகி காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த படம் 2021-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.