தனது வித்தியாசமான படங்கள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் லோகேஷ் கனகராஜ்.இவரது இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன்,மக்கள் செல்வன் விஜய்சேதுபதி,ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் விக்ரம்.இந்த படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் அறிவிப்பு முதலே பலரையும் பெரிய எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது.3 மாபெரும் நடிகர்கள் ஒன்றிணையும் படம் என்பதால் அதீத எதிர்பார்ப்பில் இருந்தது.இதனை இன்னும் கொஞ்சம் ஏற்றும் விதமாக சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்ப்பை இன்னும் ஏற்றியது.

இப்படி பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் சிறப்பு காட்சி ஒன்றை பிரபலங்கள் பார்ப்பதற்காக சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த சிறப்பு காட்சியில் படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் உடன் கமல்ஹாசன் படம் பார்த்துள்ளார்,அத்துடன் ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருந்த ஷோவிலும் இணைந்து படம் பார்த்த .அதில் பேசிய அவர் படத்திற்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர்,இது பெரும் மகிழ்ச்சியை தருகிறது.மிகப்பெரிய ரிலீசாக இது அமைந்துள்ளது,இன்னும் பெரிய வெற்றி பெரும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்