கலகலப்பும், கண்ணீர் கதைகளும் என முதல் வாரத்தை  கடந்தது பிக் பாஸ் தமிழ் சீசன் 5. முதல் முறையாக 18 போட்டியாளர்களுடன் மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

முதல் வாரத்தில் கேப்டன்கள் தேர்வு மற்றும் கடந்து வந்த பாதை சுற்று நடைபெற்றன. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களின் கடந்து வந்த பாதையும் நெகிழ வைத்தது. குறிப்பாக நமீதாவின் மிகக் கொடுமையான கடந்து வந்த பாதை பிக் பாஸ் போட்டியாளர்களோடு சேர்ந்து பிக்பாஸ் ரசிகர்களையும் கண்கலங்க வைத்தது.

ஆனாலும் பிரியங்கா, ராஜு மற்றும் அண்ணாச்சியின் சிரிப்பு வெடிகளில்  பிக்பாஸ் வீடு தொடர்ந்து கலகலப்பாகவும் நகர்ந்தது. அதிலும் பிரியங்கா பிக்பாஸ்-ஐ பெருசு என அழைப்பதும் , மற்ற போட்டியாளர்களை கலாய்ப்பதும் என அவ்வபோது கண்ணீரில் மூழ்கும் பிக்பாஸ் வீட்டை கலாய்த்து கரை சேர்கிறார் பிரியங்கா.

இந்நிலையில் சனிக்கிழமையான இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியானது. இதில் உலக நாயகன் கமல்ஹாசன், “வெற்றிக்கு ஒரே ஃபார்முலாதான்... தடைகளை வென்று முன்னேறுவது... வெற்றி இறுதி இலக்கு அல்ல... தொடர் நிகழ்வுதான் வெற்றி... அனைவருக்குமே வெற்றிகள் தொடர வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும்…” எனத் தொடங்கும் இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ…