உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்துள்ளது. முன்னதாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விபத்து காரணமாக தடைப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதில் நிறைய சிக்கல்கள் நிலவி வந்த நிலையில், இயக்குனர் ஷங்கர் தனது அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பை வெளியிட லைகா நிறுவனம் ஷங்கர் மீது வழக்கு தொடர்ந்தது. இதனிடையே இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் RC15 திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார்.

எனவே இந்தியன் 2 திரைப்படம் தயாராகுமா..? என பல சந்தேகங்கள் நிலவி வந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் விரைவில் இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்திருந்தார். உதயநிதி ஸ்டாலினின் இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

உலக நாயகன் கமல் ஹாசனின் அன்பு கோரிக்கையை ஏற்று வந்த உதயநிதி ஸ்டாலினின் வருகைக்கு பின்னர் தற்போது இயக்குனர் ஷங்கர் மீது லைகா புரொடக்ஷன்ஸ் தொடர்ந்த வழக்கை கைவிடுவதாகவும் விரைவில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளராக உதயநிதி ஸ்டாலின் லைகா உடன் இணைவது இந்தியன் 2 திரைப்படத்தை வலுப்படுத்தியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வருகையால் தடைகள் நீங்கி இநதியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது தமிழ் திரையுலகிற்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. இதுகுறித்த இதர தகவல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

Wow! Udhayanidhi Stalin steps in to revive #Indian2 on the request of Kamal Haasan and Lyca’s Subhaskaran, paving the way for one of India’s biggest films. @LycaProductions to drop charges against Dir. Shankar. Exciting times ahead for Tamil cinema! @Udhaystalin @ikamalhaasan pic.twitter.com/EcJjoUTWXU

— Galatta Media (@galattadotcom) July 1, 2022