சினிமா உலகையே தன் வசம் வைத்திருப்பவர் உலகநாயகன் கமல்ஹாசன். சினிமா மற்றும் அரசியல் என இரண்டு துறைகளிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். கலைநேசனான கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 61 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், அடுத்தடுத்து நடிகர், நடன கலைஞர், வசனம், பாடல்கள், இயக்குனர் என பல பரிமாணங்களை தொட்டார்.

தனது 5-வது வயதில் சினிமாவுக்குள் நுழைந்த கமல்ஹாசன் 25-வது வயதிலேயே ராஜ பார்வை திரைப்படத்தில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். அதற்கு முன்பே, எம்ஜிஆர், சிவாஜிகணேசன், ஜெயலலிதா உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் படங்களில் நடன உதவியாளராக பணியாற்றினார். தனது செல்வாக்கு உயர்ந்த சூழலில்கூட சினிமா வழியே தான் ஈட்டிய பணம் முழுவதையும் சினிமாவிலேயே உபயோகித்தவர் நம்மவர். 

ரசிகர்களால் அன்போடு ஆண்டவர் என்றழைக்கப்படும் நம்மவரின் சாதனை பயணத்தை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருவதோடு நலத்திட்ட உதவிகளும் செய்து வருகின்றனர். பல கலைஞர்கள் அவருக்கு ட்ரிபியூட் செய்து வருவதை காண முடிகிறது. கமல் ஹாசன் போல் மேக்கப் செய்வது, அவரது ஹிட் பாடல்களை பாடுவது, அவர் நடித்த படங்களின் காட்சிகளை ரீகிரியேட் செய்வது என அசத்தி வருகின்றனர். 

லாக்டவுனில் பல திரைப்பிரபலங்களின் போட்டோஷூட்கள் வைரலாவதை பார்க்க முடிகிறது. ஹீரோ, ஹீரோயின்கள் அல்லாது காமெடி ரோலில் நடிப்பவர்களும், வில்லன் பாத்திரத்தில் நடிப்பவர்களும் என அனைவரும் போட்டோஷூட்களில் அசத்தி வருகின்றனர். இந்நிலையில் உலகநாயகன் கமல் ஹாசனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகிறது. சிறு வயதிலிருந்து கேமராவை பார்க்கும் இவருக்கு போஸ் தர கற்றுத்தரவா வேண்டும் ? வயது வெறும் எண் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளது. 

முழு நேர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசன் கைவசம், இந்தியன் 2 திரைப்படம் உள்ளது. இது தவிர்த்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ஓர் படத்திலும் கமல் ஹாசன் நடிக்கஉள்ளார் என்று கூறப்படுகிறது. 

kamal haasan latest photoshoot picture goes viral kamal haasan latest photoshoot picture goes viral