இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற நடிகராகவும் கலைஞானியாகவும் திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

பல்வேறு காரணங்களால் தடைபட்டிருந்த இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கப்பட்டது. லைகா ப்ரோடக்ஷன்ஸ் உடன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தியன் 2 படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, டெல்லிகணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

முன்னணி எழுத்தாளர் B.ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும் லக்ஷ்மி சரவணக்குமார் ஆகியோர் வசனங்களை எழுதியுள்ள இந்தியன் 2 திரைப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று செப்டம்பர் 22ஆம் தேதி படப்பிடிப்பில் இணைந்தார்.

இந்நிலையில் இந்தியன் திரைப்படத்தின் புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் ஆடை வடிவமைப்பாளர் அமிர்தா ராம் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை காஜல் அகர்வாலும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவிட்டு இந்தியன்-2 படப்பிடிப்பிற்கு தயாராவதாக தெரிவித்துள்ளார். வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ… 
kamal haasan indian 2 movie new shooting spot photos kajal aggarwal kamal haasan indian 2 movie new shooting spot photos kajal aggarwal