'ராகவன் DCP மீண்டும் வரார்!'- உலகநாயகன் கமல்ஹாசன்-கௌதம் வாசுதேவ் மேனனின் வேட்டையாடு விளையாடு ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு பட ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு,kamal haasan in vettaiyaadu vilayaadu movie re release date announcement | Galatta

முற்றிலும் புதிய பரிமாணத்தில் ரீ மாஸ்டர் செய்யப்பட்டு இருக்கும் உலகநாயகன் கமல்ஹாசன் - இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் ரீ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஜாம்பவானாக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடிப்பில் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனைகள் படைத்தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து உலகநாயகன் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

அந்த வகையில் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மிக நீண்ட இடைவெளிக்கு பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இதுபோக மலையாளத்தில் சகத் பாசன அடிப்படையில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனா மாலிக் படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் ஒரு திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் உலகநாயகன்.

முன்னதாக தனது தீவிர ரசிகரான இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் தான் வேட்டையாடு விளையாடு. கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்று மெகா ஹிட் ஆனது. செவன்த் சேனல் கம்யூனிகேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவில், ஆண்டனி படத்தொகுப்பு செய்ய ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். பக்கா ஆக்சன் கிரைம் த்ரில்லர் படமாக வெளிவந்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் தற்போதும் விறுவிறுப்பான ஸ்டைலான பல கிரைம் த்ரில்லர் படங்கள் வரும் அளவிற்கு ஒரு ட்ரெண்ட் செட் செய்த திரைப்படம் என்று சொல்லலாம். விறுவிறுப்பான திரைக்கதை கவனிக்க வைக்கும் காட்சி அமைப்புகள் என டெக்னிக்கலாகவும் தமிழ் சினிமாவின் மிக முக்கிய படங்களில் ஒன்றாக கவனிக்கப்படும் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் இசையில் வெளிவந்த ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை கொண்டாட வைத்தன.

முன்னதாக கடந்த சில வாரங்களாகவே வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் ரீ ரிலீஸ் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி இருந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பாபா திரைப்படம் ரீ மாஸ்டர் செய்யப்பட்டு ரீ ரிலீஸான நிலையில், வெகு விரைவில் கமல்ஹாசன் அவர்களின் வேட்டையாடு விளையாடு படமும் ரீ ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி முற்றிலும் புதிய பரிமாணத்தில் ரீ மாஸ்டர் செய்யப்பட்ட வேட்டையாடு விளையாடு திரைப்படம் வருகிற ஜூன் 23ஆம் தேதி ரிலீஸாகும் என தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…
 

#DCPRaghavanisBack🔥#Ulaganayagan @ikamalhaasan's #VettaiyaaduVilaiyaadu remastered version will be re-released in theatres on June23
by@kmspictures_ & #ymrcreations@menongautham @Jharrisjayaraj #Jyothika #kamalinimukerji @prakashraaj @_sakthi_vel @pro_barani @thiruupdates pic.twitter.com/LjQoMsYIrZ

— barani alagiri (@pro_barani) June 9, 2023

ரசிகர்களுக்கு புது சர்ப்ரைஸ் கொடுக்கும் ஜீவி பிரகாஷ் குமார்... வைரலாகும் கலக்கலான GLIMPSE இதோ!
சினிமா

ரசிகர்களுக்கு புது சர்ப்ரைஸ் கொடுக்கும் ஜீவி பிரகாஷ் குமார்... வைரலாகும் கலக்கலான GLIMPSE இதோ!

முதல்முறை லட்சங்களில் வாங்கிய அட்வான்ஸ்... ARமுருகதாஸ் உட்பட தன் உதவி இயக்குனர்களுக்கு SJசூர்யா செய்த பேருதவி! வைரல் வீடியோ
சினிமா

முதல்முறை லட்சங்களில் வாங்கிய அட்வான்ஸ்... ARமுருகதாஸ் உட்பட தன் உதவி இயக்குனர்களுக்கு SJசூர்யா செய்த பேருதவி! வைரல் வீடியோ

'அவர விட க்யூட்டா யாராவது இருக்க முடியுமா?'- தளபதி விஜய் பற்றி இதுவரை வெளிவராத ருசிகர தகவலை பகிர்ந்த சித்தார்த்! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

'அவர விட க்யூட்டா யாராவது இருக்க முடியுமா?'- தளபதி விஜய் பற்றி இதுவரை வெளிவராத ருசிகர தகவலை பகிர்ந்த சித்தார்த்! ட்ரெண்டிங் வீடியோ