இந்திய திரையுலகின் ஆகச் சிறந்த கலைஞனான உலகநாயகன் கமல்ஹாசன் அடுத்ததாக விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விக்ரம் திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

விக்ரம் திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, முன்னணி மலையாள நடிகர் ஃபகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, மகேஸ்வரி மற்றும் சுவதிஸ்டா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மேலும் விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். முன்னதாக பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தனது KH-ஹவுஸ் ஆஃப் கதர் நிறுவனத்தை அறிமுகம் செய்த நிலையில் தற்போது ஹவுஸ் ஆஃப் கதர் நிறுவனத்தின் தொடக்கத்திற்கான முன்னோட்டமாக புதிய வீடியோ வெளியானது.

இந்த வீடியோவில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பல மாடல் கலைஞர்கள் விதவிதமான கதர் ஆடைகளை அணிந்து வருகிறார்கள். இந்த ஆடைகள் அனைத்தையும் அமிர்தா ராம் வடிவமைத்துள்ளார். முன்னணி ஒளிப்பதிவாளர் ரத்னவேலு இந்த வீடியோவை இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகநாயகன் கமல்ஹாசனின் ஸ்டைலான KH-ஹவுஸ் ஆஃப் கதர் வீடியோ இதோ…