ஜிப்ரான் இசையில் அனிருத்-கமல் பாடும் கொரோனா விழிப்புணர்வு பாடல் !
By Aravind Selvam | Galatta | April 20, 2020 18:07 PM IST

உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.
கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதனால் பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
கமல் இதுகுறித்த விழிப்புணர்வு விடீயோக்களை வெளியிட்டுள்ளார்.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இசையமைப்பாளர் ஜிப்ரான் ஒரு பாடலை இசையமைத்து வருகிறார்.இந்த பாடலை கமல்ஹாசன் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
Coronavirus | Telangana becomes first Indian state to extend lockdown till May 7
20/04/2020 04:32 PM