ரேடியோ தொகுப்பாளினியினாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி பிரபலமான சீரியல் நடிகையாக சின்னத்திரையில் அசத்தி வருபவர் அஞ்சனா.ரேடியோ ஜாக்கியாக ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவர் அடுத்ததாக சீரியல்களில் என்ட்ரி கொடுத்தார்.

தமிழில் ஒளிபரப்பான கல்யாண வீடு சீரியல் மூலம் சீரியல் நடிகையாக மாறினார்.ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் அஞ்சனா.இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.இதனை தொடர்ந்து ஒரு மலையாள படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து மலையாள சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.Jeevitha Nouka Sumithra என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்தார்.இந்த சீரியல் நிறைவடைந்த பின் Sasneham என்ற மலையாள சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார் அஞ்சனா.தமிழிலும் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கீதாஞ்சலி என்ற தொடரில் ஒரு நாயகியாக நடித்து கலக்கி வருகிறார்.

தென்னிந்திய தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான இவருக்கு கடந்த மே 9ஆம் தேதி Vishwa Kirti Misra என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை புதுமண தம்பதிக்கு தெரிவித்து வருகின்றனர்.