இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் கல்கி கோச்சலின். 2007-ம் ஆண்டு திரைப்பயணத்தை துவங்கியவர், தேவ் டி, சைத்தான், த்ரிஷ்னா, ஷாங்காய், ஹேப்பி என்டிங், கல்லி பாய் உட்பட பல படங்களில் படங்களில் நடித்துள்ளார். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஒரே ஒரு பாடலுக்கு தோன்றினாலும், அசத்தலான நடனத்தை வெளிப்படுத்தியிருப்பார் கல்கி. பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்த இவரது பெற்றோர் பிரெஞ்ச் நாட்டை சேர்ந்தவர்கள்.  

இவரும் பிரபல இந்தி பட இயக்குனர், நடிகர் அனுராக் காஷ்யப்பும் காதலித்து கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அனுராக்கிற்கு இது இரண்டாவது திருமணம். பின்னர் கடந்த சில வருடங்களுக்கு முன் பிரிந்த இவர்கள், 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். 

இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கய் ஹெர்ஸ்பர்க் என்பவரை காதலித்து வந்தார் நடிகை கல்கி. இவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் லிவிங்கில் வாழ்ந்து வந்தனர். இதையடுத்து கர்ப்பமான கல்கி, தாய்மை அடைந்திருப்பதைப் பற்றி உருக்கமாக இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார். 

இந்த பிப்ரவரி மாதம் பெண் குழந்தைப் பிறந்தது. குழந்தைக்கு சப்போ என்று பெயர் வைத்துள்ளார். லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் நடிகை கல்கி கோச்சலின், தனது மகளைத் தூங்க வைக்க, தமிழில் தாலாட்டு பாடலை பாடியுள்ளார். கிட்டார் இசைத்தப்படி அவர் பாடும், கண்மணி கண்ணுறங்கு பொன்மணி என்ற பாடல் ஈர்த்து வருகிறது. பாடலை கேட்டபடி குழந்தை அங்கும் இங்கும் எட்டி பார்க்கிறது. குழந்தையை தூங்க வைக்க இந்த தாலாட்டு சிறப்பானது என்று கமெண்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். 

அனுராக் காஷ்யபின் மகள் ஆலியா, இது இனிமையாக இருக்கிறது. எனக்கே தூக்கம் வருகிறது என்று கூறியுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் வெப்சீரிஸில் கல்கி கோச்சலின் நடிக்கிறார். அஞ்சலி முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்த வெப்சீரிஸுக்காக தனது டப்பிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Adapted from the original to accommodate my lack of musical experience🙈, but this Tamil lullaby is a great one to get her in sleep mode😴

A post shared by Kalki (@kalkikanmani) on