ஜீவா,அருள்நிதி இருவரும் இணைந்து ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் களத்தில் சந்திப்போம்.தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவங்களின் ஒன்றான சூப்பர் குட் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இது சூப்பர் குட் பிலிம்ஸின் 90ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.விமல் நடித்த மாப்ள சிங்கம் படத்தை இயக்கிய ராஜசேகர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர்,மஞ்சிமா மோகன் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இந்த படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தகவல்கள் பரவி வந்தன.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் திரையரங்குகள் திறக்கப்படும் அறிவிப்பு வந்த பிறகு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது.காதல்,காமெடி,ஆக்ஷன் என்று செம பேக்கேஜ் ஆக உள்ள இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.யுவனின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்