தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் வெற்றிப் படங்களைத் தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸின் 90-வது படமாக வெளியான திரைப்படம் களத்தில் சந்திப்போம். இதில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், ப்ரியா பவானி சங்கர், ராதாரவி, ரோபோ சங்கர், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். என்.ராஜசேகர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார்.

இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, தென்காசி, காரைக்குடி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்துவிட்டாலும், கொரோனா அச்சுறுத்தலால் வெளியீடு தாமதமாகி தற்போது குடும்பங்கள் கொண்டாடும் படமாக திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. 

ஜீவாவும் அருள்நிதியும் கபடி களத்தில் எதிரெதிர் அணியில் மோதுபவர்கள். களத்துக்கு வெளியே ஒருவருக்கொருவர் தோள் கொடுக்கும் உயிர் தோழர்கள். இவர்கள் இருவர்களின் வாழ்க்கையில் காதல், திருமணம் என்கிற கட்டம் வரும்போது அரங்கேறும் குழப்பங்கள், அது இவர்கள் நட்பை பாதிக்கும் விதம், அதிலிருந்து இவர்கள் இருவரும் மீண்டு வருவதே இதன் கதைக்கருவாகும். 

விமர்சன ரீதியாக கலவையான வரவேற்பை பெற்ற இப்படத்தின் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பாரில் ராதாரவி, ஜீவா, அருள்நிதி, ரோபோ ஷங்கர், பால சரவணனை ஆகியோர் மது அருந்தும் காட்சி இந்த ஸ்னீக் பீக் காட்சியில் இடம்பெற்றுள்ளது. 

நடிகர் பாலசரவணன் கடைசியாக ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். கிராமத்து படங்களுக்கு அவரது நகைச்சுவை காட்சிகள் பெரிய பலமாக இருக்கிறது என்றே கூறலாம்.