செம ரகளையான களத்தில் சந்திப்போம் பட ப்ரோமோ வீடியோ !
By Aravind Selvam | Galatta | February 04, 2021 22:32 PM IST

ஜீவா,அருள்நிதி இருவரும் இணைந்து ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் களத்தில் சந்திப்போம்.தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவங்களின் ஒன்றான சூப்பர் குட் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இது சூப்பர் குட் பிலிம்ஸின் 90ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.விமல் நடித்த மாப்ள சிங்கம் படத்தை இயக்கிய ராஜசேகர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர்,மஞ்சிமா மோகன் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது.காதல்,காமெடி,ஆக்ஷன் என்று செம பேக்கேஜ் ஆக உள்ள இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் பிப்ரவரி 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில் இந்த படத்தின் வீடியோ பாடல்,ப்ரோமோ என்று படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.தற்போது இந்த படத்தின் செம ரகளையான சில ப்ரோமோ வீடியோக்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Cooku with Comali's Pavithra Lakshmi in Bigg Boss Kavin's new project
04/02/2021 09:19 PM
Jiiva - Arulnithi's Kalathil Sandhippom gets a wide and massive release!
04/02/2021 07:29 PM