தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் கலையரசன். குணசித்திர வேடங்களிலும் தனது பெர்ஃபெக்ஷனை அளித்து வருகிறார். மதயாணைக்கூட்டம், முகமூடி போன்ற படங்களில் நடித்தாலும் மெட்ராஸ் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். ரஜினியின் கபாலி படத்திலும் அசத்தினார் கலையரசன்.  

kalaiyarasan

இந்நிலையில் கலையரசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 2007-ஆம் ஆண்டில் அவர் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் ஆடிஷன் போகும் போது முதல் ஃபோட்டோவாக வைப்பேன் என மலரும் நினைவுகள் பற்றி பகிர்ந்துள்ளார். 

kalaiyarasan

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் கலை.