கலைப்புலி S தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். பரியேறும் பெருமாள் வெற்றிக்கு பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்க நடிகர் லால், நட்டி நட்ராஜ், கௌரி கிஷன், லக்ஷ்மி பிரியா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுதும் நடந்து முடிந்தது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் இதன் ஷூட்டிங் நடைபெற்றது. படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றது. படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இசைப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் சந்தோஷ் நாராயணன். 

படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மற்றும் மேக்கிங் வீடியோ தனுஷ் பிறந்தநாளில் வெளியானது. போஸ்டரில் மக்கள் ஒன்றாக கத்தியை பிடித்த மாதிரி, பின்னணியில் மலை உச்சியில் காட்டில் வாழும் விலங்குகள் மற்றும் சாமானிய மக்கள் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மலை வாழ் மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் விதமாக இந்த படம் இருக்குமோ என்று கர்ணன் கதைக்கரு பற்றி சிந்தித்து வருகின்றனர் நெட்டிசன்கள். 

கர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோவும் ரசிகர்களை ஈர்த்து. படத்தின் ஆர்ட் பணிகள் எப்படி நடந்து என்பதை இந்த வீடியோவில் காண்பித்திருந்தனர். ராமலிங்கம் இந்த படத்திற்கு கலை இயக்கம் செய்துள்ளார். மேக்கிங்கில் சுத்தி உள்ள வீடுகள் அனைத்தும் செட் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்து தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ட்விட்டர் தளத்தில் கர்ணன் படத்திற்கு புதிய பக்கத்தை ஆரம்பிக்கவுள்ளார். இனிமேல் படம் சம்பந்தப்பட்ட அப்டேட்டுகள் அதிலே வரும் என்ற ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள். 

கர்ணன் படத்தில் தனுஷ் எனும் கலைஞனை மாரி செல்வராஜ் எப்படி செதுக்கியிருக்கிறார் என்பதை பார்க்க ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள். சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் குறித்து நடிகர் நட்டி ஓர் பதிவை செய்திருந்தார். அதில் படம் ரிலீஸ் ஆகட்டும்... கொண்டாடுவீங்க என்று படத்தின் தரத்தையும், மாரி செல்வராஜின் திறனையும் பாராட்டியிருந்தார் நட்டி.