லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். ஏப்ரல் மாதம் 9-ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் விநியோக உரிமையை செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோ கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

Anirudh ThalapathyVijay

இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

KakaBala

குட்டி கதை பாடலை தொடர்ந்து மாஸ்டர் படத்தின் இரண்டாம் பாடல் வாத்தி இஸ் கம்மிங் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கானா பாலச்சந்தர் எழுதி பாடியுள்ளார். இப்பாடல் உருவான விதம் குறித்தும், தளபதி விஜய் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் கலாட்டா குழுவிற்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.