எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன்.இவரது விக்ரம் படம் சமீபத்தில் வெளியாகி செம ஹிட் அடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

இவர் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் தயாராகும் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.2001-ல் வெளியாகி ஹிட் அடித்த கமல்-ஷங்கர் கூட்டணியின் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகிறது.லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.காஜல் அகர்வால்,சித்தார்த்,ப்ரியா பவானி ஷங்கர்,ரகுல் ப்ரீத்,பாபி சிம்ஹா,குரு சோமசுந்தரம்,மனோபாலா,சமுத்திரக்கனி என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் சில காரணங்களால் தடைபட்டது.

இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக படத்தின் ஹீரோயின் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார் அத்துடன் ஒரு குதிரை ஓட்டும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்