காஜல் அகர்வால்-யோகி பாபுவின் அசத்தலான ஹாரர் காமெடி ட்ரீட் தயார்… கோஸ்டி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

காஜல் அகர்வாலின் கோஸ்டி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு,kajal aggarwal in ghosty movie release date announcement | Galatta

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை காஜல் அகர்வால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகிய ஆண் குழந்தைக்கு தாயானார். தொடர்ந்து தற்போது மீண்டும் தனது திரை பயணத்தை நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்துள்ளார். கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டில் நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்குனராக களமிறங்கிய ஹே சினாமிக்கா திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி உடன் இணைந்து காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் வகையிலான படமாக ஹே சீனாமிக்கா திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னதாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக தற்போது நடித்து வருகிறார். சில தடைகளுக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் பட்சத்தில் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே பாலிவுட்டில் காஜல் அகர்வால் நடித்துள்ள உமா திரைப்படம் விரைவில் ரிலீசாக தயாராகி வருகிறது. மேலும் தமிழில் ஹாரர் திரில்லர் திரைப்படமாக நடிகை காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, தயாராகி வரும் கருங்காப்பியம் திரைப்படமும் வெகு விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் அடுத்ததாக காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவர தயாராகியுள்ள திரைப்படம் கோஷ்டி. முன்னதாக நடிகர் பிரபுதேவாவின் குலேபகாவலி மற்றும் ஜோதிகாவின் ஜாக்பாட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கும் கோஸ்டி திரைப்படத்தில் காஜல் அகர்வாலுடன் இணைந்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி, ஊர்வசி, ஆடுகளம் நரேன், சத்தியன், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, சந்தான பாரதி, லிவின்ஸ்டன், மதன் பாபு, மனோபாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, முக்கியமான கௌரவ தோற்றத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். 

SEED PICTURES நிறுவனம் தயாரிப்பில் ஹாரர் காமெடி படமாக தயாராகியிருக்கும் கோஸ்டி திரைப்படத்திற்கு ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவில் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கோஷ்டி திரைப்படம் வருகிற மார்ச் 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோஷ்டி திரைப்படம் வருகிற மார்ச் 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், "முடிவில்லாத நகைச்சுவை ரோலர் கோஸ்டர் ரைடுக்கு தயாராகுங்கள்… கோஷ்டி திரைப்படம் வருகிற மார்ச் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது! யோகி பாபுவும் நானும் இணைந்து நடித்துள்ளோம்." எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். நடிகை காஜல் அகர்வாலின் அந்தப் பதிவு இதோ…

 

Get ready for the endless comedy, roller coaster ride 🥳🥳#Ghosty releasing in theatres on March 17th.

Starring @iYogiBabu and me 👻

A @samcsmusic Musical
@Kalyaandirector @Sudhans2017 @Jayaram_gj @seedpictures1 @ksravikumardir @editorvijay @jacobcamkid @DoneChannel1 pic.twitter.com/JVEyDOXmMb

— Kajal Aggarwal (@MsKajalAggarwal) March 5, 2023

எவன்டா விஜய் சார் தெரியாதுன்னு சொன்னது..? தளபதிக்காக சண்டையிட்ட வரலக்ஷ்மி! வைரல் வீடியோ
சினிமா

எவன்டா விஜய் சார் தெரியாதுன்னு சொன்னது..? தளபதிக்காக சண்டையிட்ட வரலக்ஷ்மி! வைரல் வீடியோ

தளபதி விஜயின் லியோ படத்திற்கு கிடைத்த கூடுதல் பலம்... ட்ரெண்டாகும் அதிரடியான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இதோ!
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்திற்கு கிடைத்த கூடுதல் பலம்... ட்ரெண்டாகும் அதிரடியான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இதோ!

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் - பிக்பாஸ் கவினின் டாடா... எமோஷ்னலான தாயாக நான் வீடியோ பாடல் இதோ!
சினிமா

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் - பிக்பாஸ் கவினின் டாடா... எமோஷ்னலான தாயாக நான் வீடியோ பாடல் இதோ!