தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்தார் என்பதும் திருமணத்திற்கு பின்னர் மாலத்தீவுக்கு தேனிலவு சென்று திரும்பிய காஜல் அகர்வால் தற்போது படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு உள்ளார் என்பதும் தெரிந்ததே

இந்நிலையில் சமீபத்தில் காஜல் அகர்வால் தனது கணவருடன் பொள்ளாச்சி சென்ற நிலையில் அங்கு வழக்கமாக சாப்பிடும் மெஸ் ஒன்றில் சாப்பிட்டது குறித்த தனது அனுபவத்தை தெரிவித்துள்ளார்

பொள்ளாச்சியில் சாந்தி மெஸ் என்ற பெயரைக் கொண்ட மெஸ்ஸில் சாந்தி அக்கா மற்றும் பாலகுமார் அண்ணா ஆகிய இருவரும் உணவோடு சேர்ந்து அன்பையும் எங்களுக்கு தந்தார்கள். அவர்களுடைய உணவு மிகவும் அருமையாகவும் சுவையாகவும் இருந்தது. கடந்த 27 ஆண்டுகளாக அவர்கள் இந்த ஹோட்டலை நடத்தி வருகின்றனர். 

நான் அந்த ஓட்டலின் ஒன்பது வருட ரெகுலர் கஸ்டமர் என்று கூறியுள்ளார். இதனையடுத்து காஜல் அகர்வால் சாப்பிட்ட அந்த ஹோட்டல் எங்கே இருக்கிறது என பொள்ளாச்சியில் உள்ளவர் தேடத் தொடங்கிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருந்த லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். பிப்ரவரி 12-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இத்தொடர் ஒளிபரப்பானது. மாந்த்ரீக சக்திகள் நிறைந்த ஒரு வீட்டில் தொலைக்காட்சி தொடர் ஒன்றை படமாக்குவதற்காக காஜல் அகர்வால் உள்ளிட்ட குழுவினர் செல்கின்றனர். அப்பொழுது அங்கு ஏற்பட்ட திகில் அனுபவங்கள்தான் லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரின் கதை.

இதில் நடித்த அனுபவத்தை சமீபத்தில் பகிர்ந்துக் கொண்ட காஜல் அகர்வால் நாங்கள் படப்பிடிப்புக்கு தேர்ந்தெடுத்த இடம் மிக மிக பொருத்தமானது. இயக்குநர் வெங்கட் பிரபுவின் நண்பருடைய வீடு. மலையின் உச்சியில் தனியாக இருந்தது.படப்பிடிப்பு பெரும்பாலும் அங்கேயே தான் நடந்தது. படப்பிடிப்புக்கு பின்னரும் அந்த இடம் தந்த அச்சம் காரணமாக என்னால் தூங்கக் கூட முடியவில்லை என்று கூறியிருந்தார். 

வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் வைபவ் ரெட்டி, கயல் ஆனந்தி, ப்ரியங்கா, செல்வா, டேனியல் போப், சுப்பு பஞ்சு அருணாசலம், மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் காஜல். இதன் படப்பிடிப்பு பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.