விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா தொடர்.இந்த தொடரில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறியவர் காவியா.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

வெகு விரைவில் சீரியல் கனவுக்கன்னியாக காவியா உருவெடுத்தார்.அடுத்ததாக விஜய் டிவியின் செம ஹிட் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து அசத்தி வருகிறார் காவியா.மறைந்த நடிகை சித்ரா நடித்து வந்த கதாபாத்திரத்தில் நடித்து செம ஹிட்டான இந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

Axess Film Factory தயாரிப்பில் பரத்,வாணி போஜன் நடிக்கும் மிரள் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் காவியா அறிவுமணி.ரிப்பப்பரி என்ற படத்தில் காவ்யா ஹீரோயினாக நடிக்கிறார்.இதனை தவிர மேலும் சில படங்களில் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன,விரைவில் இந்த படங்களின் அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக சீரியலில் இருந்து சில காரணங்களால் விலகுவதாக அறிவித்துள்ளார் காவியா.கடந்த மாதத்திலேயே விலகிவிட்டதாகவும் தனது எபிசோடுகள் இனி வராது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இவரது இந்த திடீர் முடிவு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.