பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருக்கிறது.ஸ்டாலின்,சுஜிதா,குமரன்,வெங்கட்,ஹேமா,சித்ரா, சரவணவிக்ரம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடர் நல்ல TRP-யையும் பெற்று வருகிறது.

இந்த தொடரில் மிகவும் பிரபலமான கதாபாத்திரமான முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இவரது திடீர் மரணம் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் சில நாட்களுக்கு முன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.சித்ரா இறந்த நிலையில் முல்லை என்ற கதாபாத்திரத்தை முடித்துக்கொள்ளுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.புதிய முல்லையாக பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வரும் காவியா அறிவுமணி நடிக்கிறார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.

தற்போது இந்த தொடரில் முக்கிய முக்கிய வேடத்தில் நடித்து வரும் ஸ்ரீவித்யா புதிய முல்லையாக காவியா அறிவுமணி நடிக்கிறார் என்பதை சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்டு உறுதிசெய்துள்ளார்.சித்ரா ரசிகர்கள் பலர் வருத்தத்தில் இருந்தாலும் காவியா புதிய முல்லையாக ஆனதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.