மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.நானும் ரௌடி தான் பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் சமந்தா இந்த படத்தில் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.பிரபு,ஸ்ரீசாந்த்,ரெடின் கிங்ஸ்லி என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இது அனிருத்தின் 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் மற்றும் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் செம ரகளையான டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளனர்.

இந்த படத்தின் செம ஹிட் பாடலான டூ டூ டூ பாடலின் கிளிம்ப்ஸ் வீடீயோ சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த படத்தின் நான்காவது பாடலான டிப்பம் டப்பம் என்ற தற்போது வெளியாகி செம வைரலாகி வருகிறது.செம ஜாலியான இந்த பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்