இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ளார் திரைப்படம் ஜெயில். ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக அபர்நிதி நடித்துள்ளார். ராதிகா, ரோபோ ஷங்கர், யோகிபாபு போன்றோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். 

Kaathodu Kaathanen Lyric Video Dhanush Aditi GV Prakash

இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் நிறைவடைந்தது. தற்போது இப்படத்தின் முதல் பாடலான காத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. தனுஷ் மற்றும் அதிதி ராவ் பாடிய இந்த பாடல் வரிகளை கபிலன் எழுதியுள்ளார். இந்த ரொமான்டிக் பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. 

Kaathodu Kaathanen Lyric Video Dhanush Aditi GV Prakash Kaathodu Kaathanen Lyric Video Dhanush Aditi GV Prakash

சோனி நிறுவனம் கைப்பற்றிய இந்த பாடல் ஆல்பம் இன்னும் சில நாட்களுக்கு அனைவரின் பிலேலிஸ்டில் இருக்கும் என்று கூறலாம். வடசென்னை மக்களின் வாழ்வியலை பிரதிபலித்துள்ளது இத்திரைப்படம். கொரோனா லாக்டவுன் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டதும் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.