இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் இன்று வெளியான படம் காப்பான். காவல் அதிகாரிகளிலேயே சிறப்பு பாதுகாப்பு குழு எனப்படும் SPG அதிகாரிகளின் பணிச்சிறப்பும், தங்களது உயிரை பனயவைத்து நாட்டுக்காக போராடும் அதிகாரிகளின் அன்றாட வாழக்கையை பறைசாற்றும் ஓர் அரங்கமே இந்த காப்பான்.

kaappaan

suriya

சமுத்திரக்கனி, சாயீஷா, பூர்ணா, பிரேம் ஆகியோர் நடித்திருந்தனர். விறுவிறுப்பான காட்சிகள் கொண்டு முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் அசத்தியிருக்கிறார் இயக்குனர். எதார்த்தமான ரொமான்ஸ், காமெடி கொண்ட முதல் பாதியும்.. பிரதமராக இருந்த தந்தை இறந்தவுடன் பிரதமர் பதவிக்கு வரும் ஆர்யா செய்யும் லூட்டிகள், தீய நோக்கில் உள்ள தொழிலதிபர் இறுதியில் என்னவாகிறார் என்பதை கொண்டு இரண்டாம் பாதி நகர்கிறது.

kaappaan

suriya

sayeesha

தற்போது படத்திலிருந்து குறிலே குறிலே பாடல் வீடியோ வெளியானது. ஜாவேத் அலி மற்றும் தர்ஷனா இந்த பாடலை பாடியுள்ளனர். ஹாரிஸ் இசையில் வெளியான இந்த பாடலும் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.