விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கா.பெ. ரணசிங்கம். Zeeplex தளத்தில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி இந்த வெளியானது. இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். ஜிப்ரான் இசையில் அழகிய சிறுக்கி, புன்னகையே, பறவைகளா ஆகிய மூன்று பாடல்களின் லிரிக் வீடியோ படம் வெளியாவதற்கு முன்னரே வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 

வேல.ராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். வெளிநாட்டில் இறந்துபோன கணவனின் உடலை மீட்டு, தாயகம் கொண்டுவரப் போராடும் சாமானியப் பெண்ணின் கண்ணீர்க் கதை தான் இந்த க/பெ. ரணசிங்கம். அழுத்தமான உண்மைகளைப் பேசும் படமாக, சாதாரணக் குடும்பத்தின் வலிகளை உணர்த்தும் படமாக உள்ளது என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். 

சமீபத்தில் ராஜபாளையத்தில் கேபிள் டிவி ஒன்றில் க/பெ ரணசிங்கம் திரைப்படத்தை திருட்டுத்தனமாக ஒளிபரப்பிவிட்டார்கள். இதனால் இத்திரைப்படத்தின் இயக்குனர் விருமாண்டியும், வசனம் எழுதிய சண்முகம் முத்துசாமியும் நேரில் விரைந்து சட்ட ரீதியிலான நடவடிக்கையில் இறங்கினர். க/பெ ரணசிங்கத்தை திருட்டுத்தனமாக ஒளிபரப்பிய, உள்ளூர் சேனலான வைமா டிவி அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்கள் கைப்பற்றப்பட்டது. 

நாளுக்கு நாள் படம் குறித்து நல்ல விமர்சனங்கள் செவிகளுக்கு எட்டுகிறது. இப்படியொரு படத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்க முடியவில்லையே என ஏங்கினர் திரை விரும்பிகள். இந்நிலையில் இந்த படத்தை ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். தமிழில் கிடைத்த அமோக வெற்றியை தொடர்ந்து பிற மொழி ரசிகர்களையும் ஈர்க்க வருகிறது இந்த க.பெ. ரணசிங்கம். 

நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படம் எந்த மொழியில் வெளியானாலும் ஹிட் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக க.பெ. ரணசிங்கம் விளங்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். தமிழ் திரையுலகில் பிஸியான ஹீரோக்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வில்லன் ரோல், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார். 

சென்ற லாக்டவுனில் இயக்குனர் நலன் குமாரசாமியுடன் இணைந்து ஒரு குட்டி லவ் ஸ்டோரி படத்தில் நடித்தார். விஜய்சேதுபதி தற்போது எஸ்.பி. ஜனநாதன் இயக்கி வரும் லாபம் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜெய்ப்பூரில் டாப்ஸி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்தவர், லாபம் படக்குழுவில் இணைந்துள்ளார்.