சூர்யாவின் 2டி  எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்து அமேசான் ப்ரைமில் வெளியான திரைப்படம் பொன்மகள் வந்தாள். ஜே.ஜே. ப்ரட்ரிக் இயக்கிய இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்திருந்தனர். 

Jyotikas Ponmagal Vandhal Vaa Pogalam Video Song Jyotikas Ponmagal Vandhal Vaa Pogalam Video Song

ரசிகர்களின் பார்வையிலும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது இப்படம். நீதிக்காகப் போராடும் ஒரு பெண் வழக்கறிஞராக தனது பாத்திரத்தில் கச்சிதமாக பொறுந்தியிருந்தார் ஜோதிகா. அழுகை, வலி, உறுதி, துணிச்சல், அன்பு என உணர்வுகளை உன்னதமாக திரையில் கொண்டு வந்தார். 

Jyotikas Ponmagal Vandhal Vaa Pogalam Video Song

இப்படத்திலிருந்து வா போகலாம் பாடல் வீடியோ வெளியானது. சின்மயி பாடிய இந்த பாடல் வரிகளை உமா தேவி எழுதியுள்ளார். பாடல் வெளியான சில நொடிகளிலேயே இணையத்தை அசத்தி வருகிறது.