2டி  எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் பொன்மகள் வந்தாள். ஜே.ஜே. ப்ரட்ரிக் இயக்கிய இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அமேசான் ப்ரைமில் வெளியான இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. கோவிந்த் வசந்தா இசையமைத்த இந்த படத்தில் பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் போன்ற நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

Jyotika Speaks About Kaakha Kaakha Sequel

இந்நிலையில் ரசிகர்களுக்காக லைவ்வில் வந்தார் ஜோதிகா. அப்போது ரசிகர் ஒருவர் காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த ஜோதிகா, நிச்சயமாக நடிப்பேன். கவுதம் மேனன் ஸ்கிரிப்ட் ரெடி செய்தால், நடிக்கத் தயார் என்று கூறியுள்ளார். 

Jyotika Speaks About Kaakha Kaakha Sequel

கடந்த 2003-ம் ஆண்டில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் காக்க காக்க. சூர்யா, ஜோ திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படம் இது. 17 ஆண்டுகள் கழித்தும் இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.