தமிழ் சினிமா நடிகைகளில் தனக்கென ஒரு தனி இடத்தையும்,தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர்ஜோதிகா.இவர் நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் வரும் 29ஆம் தேதி OTT-யில் வெளியாகவுள்ளது.

Jyothika Sasikumar Film Update By DOP Velraj

இதனை தொடர்ந்து இவர் கத்துக்குட்டி பட இயக்குனரின் படத்தில் நடித்து வந்தார்.சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.இந்த படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

Jyothika Sasikumar Film Update By DOP Velraj

சூரி,சமுத்திரக்கனி,நிவேதிதா சதிஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.வேல்ராஜ் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.

Jyothika Sasikumar Film Update By DOP Velraj

தற்போது கலாட்டாவின் ஃபேஸ்புக் லைவ்வில் வந்த வேல்ராஜ் இந்த படம் குறித்த சில முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.இந்த படத்தின் முக்கால்வாசி ஷூட்டிங் முடிந்து விட்டது என்றும் இன்னும் ஓரிரு நாட்கள் தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.கொரோனா வராமல் இருந்திருந்தால் இந்த ஷூட்டிங்கை முடித்திருப்போம் என்று அவர் தெரிவித்தார்.

Jyothika Sasikumar Film Update By DOP Velraj