தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ஜோதிகா, சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாகவும் சிறந்த நடிகையாகவும் வலம் வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக நடிகை ஜோதிகாவின் 50-வது திரைப்படமாக வெளிவருகிறது உடன்பிறப்பே திரைப்படம்.

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் உடன்பிறப்பே திரைப்படத்தில்  ஜோதிகாவுடன் இணைந்து சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க ஷிஜா ரோஸ், சூரி, கலையரசன், ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் இரா.சரவணன் எழுதி இயக்கியுள்ள உடன்பிறப்பே திரைப்படத்தை  R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். முன்னதாக வெளியான டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து சமீபத்தில் வெளிவந்த உடன்பிறப்பே படத்தின் முதல் பாடலான அண்ணே யாரண்ணே பாடலும் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது 2-வது பாடலாக “ஒத்தப்பன காட்டேரி” பாடல் வெளியாகியுள்ளது. பாடகர் சிட் ஸ்ரீராம் குரலில் வெளிவந்துள்ள அழகிய இப்பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.