தமிழ் சினிமாவின் அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் சிறந்த கதாநாயகியாக மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் நடிகை ஜோதிகா. 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜோதிகா தொடர்ந்து கதாநாயகியை முன்னிறுத்தும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

முன்னதாக நடிகை ஜோதிகாவின் நடிப்பில் வெளிவந்த  திரைப்படம் உடன்பிறப்பே படத்தில், ஜோதிகாவுடன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்க, ஷிஜா ரோஸ், சூரி, கலையரசன், ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இயக்குனர் இரா.சரவணன் எழுதி இயக்கித்தில்,  நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் உடன்பிறப்பே திரைப்படம் நடிகை ஜோதிகாவின் 50வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. உடன்பிறப்பே திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். 

கடந்த ஆயுத பூஜை வெளியீடாக அக்டோபர் 14-ஆம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீசான உடன்பிறப்பே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் டி.இமான் இசையமைத்துள்ள உடன்பிறப்பே படத்திலிருந்து "தெய்வம் நீதானே" பாடல் வெளியானது. இந்தப் பாடலை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.