சன் டிவியில் ஒளிபரப்பான செம ஹிட் தொடர்களில் ஒன்று நந்தினி.சுந்தர் சியின் அவ்னி ப்ரோடுக்ஷன் நிறுவனம் இந்த தொடரை தயாரித்திருந்தனர்.சுந்தர் சி இந்த தொடருக்கு கதை எழுதியிருந்தார்.ராஜ்கபூர் இந்த தொடரை இயக்கி இருந்தார்.பிரம்மாண்டமாக தயாரான இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பானா நேரத்தில் TRP-யை அள்ளி வந்தது.

விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடர் கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து தனது ஒளிபரப்பை நிறுத்தியது.இதன் இரண்டாம் பாகம் தற்போது ஜோதி என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.இரண்டாவது சீசனில் விஷ்ணு உன்னிகிருஷ்ணன் ஹீரோவாக நடிக்கிறார்.மேகாஸ்ரீ மற்றும் சாந்தனா சேகு இருவரும் ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.

இந்த தொடரையும் அவ்னி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கின்றனர்.ராஜ்கபூர் இயக்கவுள்ளார்.இந்த தொடரின் சில எபிசோடுகள் மட்டும் படமாக்கப்பட்டு பின்னர் சில காரணங்களால் கைவிடப்பட்டது.முதலில் சன் NXT மற்றும் தெலுங்கில் இந்த தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டது.சன் டிவியில் கடந்த மே மாதம் முதல் வார இறுதியில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் எடுக்கப்பட்டவரை ஒளிபரப்பு செய்யப்பட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதியுடன் நிறைவு பெற்றுள்ளது.

விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடர் நிறைவடைந்ததால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.தற்போது இந்த தொடரின் நாயகி மேகாஸ்ரீ போஜ்புரி படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.