ஜூமாஞ்சி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
By Aravind Selvam | Galatta | November 26, 2019 19:16 PM IST
90ஸ் கிட்ஸ்ன் Favourite படங்களில் ஒன்று ஜூமாஞ்சி.1995ல் வெளிவந்த இந்த படத்தின் முதல் பாகம் அமோக வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 2015ல் வெளியிட்டனர்.இந்த படமும் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.இந்த படத்திலும் Dwayne Johnson, Jack Black, Kevin Hart and Karen Gillen உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.கொலம்பியா பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தை சோனி நிறுவனம் விநியோகம் செய்கிறது.
இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படம் இந்தியாவில் டிசம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர்.