தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் Jr.NTR.கடைசியாக Aravinda Sametha Veera Raghava என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் RRR படத்தில் நடித்து வருகிறார்.

Jr NTR Note To Fans on His Birthday Corona RRR

இந்த படத்தில் இவரோடு இணைந்து ராம்சரண் மற்றுமொரு ஹீரோவாக நடித்து வருகிறார்.இந்த படம் பொங்கல் 2021 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.நாளை NTR பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் எந்த அறிவிப்பும் வெளியிடப்போவதில்லை என்று தெரிவித்தனர்.

Jr NTR Note To Fans on His Birthday Corona RRR

பிறந்தநாள் குறித்து Jr.NTR ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.வருட வருடம் நீங்கள் என் பிறந்தநாள் அன்று அதீத அன்பை காட்டி வருகிறீர்கள்.இப்போது இருக்கும் சூழலில் நீங்கள் அனைவரும் பத்திரமாக வீட்டில் இருப்பதே என் பிறந்தநாளுக்கு தரும் மிகப்பெரிய பரிசாக இருக்கும் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்மேலும் RRR படக்குழுவினர் தங்களால் முடிந்தளவு ஏதேனும் ரிலீஸ் செய்யவேண்டும் என்று போராடினர் ஆனால் தற்போதுள்ள சூழலில் இயலவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.