பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டாகிய அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு அந்தகன் என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை பொன்மகள் வந்தாள் இயக்குனர் ஜேஜே பெடரிக் என்பவர் இயக்க இருப்பதாகவும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்திக் மற்றும் சிம்ரன் உள்பட பலர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் இந்த படம் குறித்த ஒரு சில வதந்திகளும் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருந்தது. இந்த படத்தின் இயக்குனர் உள்பட தொழில்நுட்ப கலைஞர்கள் ஒட்டுமொத்தமாக விலகி விட்டார்கள் என்றும் இதனால் இந்த படம் டிராப் என்றும் வதந்தியாக கூறப்பட்டது.

ஆனால் வதந்திகளை பொய்யாக்கும் வகையில் சற்று முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கியது என்பதும் இன்றைய பூஜையில் தியாகராஜன், பிரசாந்த், சிம்ரன், உள்பட பலரும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தகன் படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற விவரம் தெரியவில்லை. படத்தில் நவரச நாயகன் கார்த்திக், யோகிபாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், லீனா சாம்சன், செம்மலர், பூவையார் ஆகியோர் நடிக்கின்றனர். 

கிறிஸ்துமஸ் நாளில் பிரசாந்த் பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர் படக்குழுவினர். இந்த படத்திற்காக பியானோ பயிற்சியில் பிரசாந்த் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது. மாரி சக்தி என்ற பியானோ கலைஞர் பிரசாந்திற்கு ட்ரைனிங் தந்துள்ளார்.