தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர் ஜீவா.இவர் சமீபத்தில் வெளியான 83 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து பலரது பாராட்டையும் பெற்று வருகிறார்.இதனை அடுத்து சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் ஜீவா.

இன்று ஜீவாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வரலாறு முக்கியம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம்  ரோம்-காம் படமாக உருவாகிறது.இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்குகிறார்.

நடிகை காஷ்மீரா பர்தேஷி இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தில் பிரக்யா நாகரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, TSK, E ராமதாஸ், லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி  நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜிமிக்கி கம்மல் பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார்.சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரடக்‌சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் டிரைலர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.