மீண்டும் தள்ளிப்போகும் ஜீவாவின் படம் ! விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | June 30, 2019 17:36 PM IST
ஜீவா நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ள படம் கொரில்லா.ஷாலினி பாண்டே இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.யோகி பாபு,சதிஷ்,ராதாரவி,மொட்ட ராஜேந்திரன்,ராமதாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இவர்களுடன் இணைந்து Kong என்று கொரில்லாவும் படத்தில் நடித்துள்ளது.
Don Sandy இந்த படத்தை இயக்கியுள்ளார்.All in pictures நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.ரூபன் இந்த படத்தின் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.இந்த படம் முதலில் ஜூன் 21ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ஜூலை 5ஆம் தேதிக்கு தள்ளிப்போனது.
தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறது என்றும் வரும் ஜூலை 5ஆம் தேதி ரிலீசாகாது என்றும் தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.