தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகர்கள் ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா.இருவரும் தங்களுக்கான பாணியில் படங்கள் நடித்து தங்களுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளனர்.இவர்கள் இருவரும் இணைந்து சுந்தர் சி இயக்கத்தில் 2018-ல் வெளியான கலகலப்பு 2 படத்தில் நடித்திருந்தனர்.

தற்போது ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.கோல்மால் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில்லுக் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியானது.இந்த படம் பூஜையுடன் இன்று தொடங்கியது.

ஜாக்குவார் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் வினோத் ஜெயின் இந்த படத்தை தயாரிக்கிறார்.இந்த படத்தினை பொன்குமரன் இயக்குகிறார்.பாயல் ராஜ்புட் மற்றும் தான்யா ஹோப் இருவரும் இந்த படத்தின் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர்.

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகவுள்ள இந்த படம் மொரிஷியஸில் படமாக்கப்படவுள்ளது என்பதை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.ஒரே கட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.இரண்டு இளம் நடிகர்கள் இணையும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.