ஜீவா சீறு படத்தின் ரிலீஸை அடுத்து தனது முதல் பாலிவுட் படமான 83-ல் நடித்து வந்தார்.1983-ல் உலகக்கோப்பை வென்ற கிரிக்கெட் அணியை பற்றி உருவாகியுள்ளது.இந்த படத்தில் தமிழக வீரர் கிறிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடித்துள்ளார்.

Jiiva Arjun Raashi Khanna Methavi Title Look

இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.இதனை தொடர்ந்து ஜீவா மக்கள் அரசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் மேதாவி படத்தில் நடிக்கிறார்.பாடலாசிரியர் பா.விஜய் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

Jiiva Arjun Raashi Khanna Methavi Title Look

ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கின்றார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.நகைச்சுவை பங்கிற்கு சாரா, “கைதி” படம் தினா, ரோபோ ஷங்கரின் மகள் பிரியங்கா இவர்களோடு ராதாரவி, Y.G. மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Jiiva Arjun Raashi Khanna Methavi Title Look

இன்று பிறந்த நாள் கொண்டாடும் தயாரிப்பாளர் சு.ராஜா, “மேதாவி” படத்தின் அறிவிப்பை வெளியிட்டதோடு, பெப்சி தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களிடம் சினிமா பெப்சி தொழிலாளர்களுக்காக 5kg அரிசி 25,000 மூட்டைகளை (1,25,000 kgs) இன்று வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். இந்த படத்தின் பிற அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது.

Jiiva Arjun Raashi Khanna Methavi Title Look

Jiiva Arjun Raashi Khanna Methavi Title Look