2014-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா.கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தினை இயக்கியிருந்தார்.சித்தார்த்,பாபி சிம்ஹா,லட்சுமி மேனன்,கருணாகரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.

சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.2014-ல் வெளியானாலும் இன்று வரை ரசிகர்களின் மனம் கவர்ந்த படமாக இந்த படம் இருந்து வருகிறது.இன்றுடன் இந்த படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆகிறது.

இதனை முன்னிட்டு ஒரு ஸ்பெஷல் மேக்கிங் வீடீயோவை பகிர்ந்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.இந்த வீடீயோவில் படம் உருவானது குறித்த சில வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.இதோடு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ஒரு அறிவிப்பையும் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது என்றும் அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஜிகர்தண்டா 2 படத்தின் அறிவிப்பு பல ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.அடுத்தடுத்த சுவாரசிய அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.