ஜெயம் ரவியின் பூமி கடைக்கண்ணாலே பாடல் ப்ரோமோ !
By Aravind Selvam | Galatta | October 20, 2020 16:04 PM IST

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி கடந்த வருடத்தின் சூப்பர்ஹிட் வெற்றியடைந்த திரைப்படம் கோமாளி..அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.காஜல் அகர்வால் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.யோகி பாபு,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் 100 நாட்களை கடந்து பெரிய வெற்றியை பெற்றது.
வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹேக்டே இந்த படத்தின் ஹீரோயின்களாக நடித்து அசத்தியிருந்தனர்.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.இவரது இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பயங்கர ஹிட் அடித்திருந்தது.
இதனை தொடர்ந்து பூமி,ஜனகனமன,பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.பூமி ஜெயம் ரவி நடித்து வரும் 25ஆவது படமாகும்.இந்த படத்தை ரோமியோ ஜூலியட்,போகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்கியுள்ளார்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.Home Movie Makers இந்த படத்தை தயாரித்துள்ளனர்.நிதி அகர்வால் இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் மே 1அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.இந்த படம் OTT தளத்தில் வெளியாகும் என்றும் செய்திகள் வருகின்றன,இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.
இந்த படத்தின் முதல் பாடலான தமிழன் என்று சொல்லடா என்ற பாடல் ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாடல் வரும் அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.தற்போது இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
The pleasing combo @shreyaghoshal & @immancomposer joins for 2nd single #Kadaikkanaale from #Bhoomi ft. @actor_jayamravi & @AgerwalNidhhi 😍
Full Song from Oct 21st! #KadaikkanaaleOnOct21st @dirlakshman @theHMMofficial @sujataa_hmm @Kavithamarai @SonyMusicSouth @onlynikil pic.twitter.com/2NARDgPLgU— Home Movie Makers (@theHMMofficial) October 19, 2020
Housemates attempt to trigger Rio | latest Bigg Boss promo | Suresh Chakravarthy
20/10/2020 03:14 PM
Law college student shocked after her teen movie scenes appear on adult websites
20/10/2020 02:38 PM
STR to make a strong comeback on October 22 - Trending Promo Video here!
20/10/2020 01:21 PM