தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.இவர் நடிப்பில் கடைசியாக கடந்த 2019-ல் வெளியான கோமாளி திரைப்படம் சூப்பர்ஹிட் முடித்திருந்தது.இதனை தொடர்ந்து ஜெயம் ரவி லக்ஷ்மன் இயக்கத்தில் பூமி,அஹ்மத் இயக்கத்தில் ஜன கன மன,மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி நடித்துள்ள 25ஆவது படமான பூமி திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகவிருந்தது.ஆனால் கொரோனா காரணமாக இந்த படத்தினை நேரடியாக OTT தளத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.இந்த படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அகர்வால் இந்த படத்தின் நாயகியாக நடித்துள்ளார்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்,இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்து வருகிறது.

தற்போது ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படமான JR 28 படத்தை கல்யாணகிருஷ்ணன் இயக்குகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் ஏற்கனவே ஜெயம் ரவி பூலோகம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.