ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டி: சென்னையின் பிரபலமான ஸ்டுடியோவில் ரஜினி, ஷாருக்கான், சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.

ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டி, சென்னையில் உள்ள மிகப்பெரிய திரைப்பட ஸ்டுடியோக்களில் ஒன்றாகும், இது திரைப்பட தயாரிப்பாளர் திரு. ஆதித்யாராம், ஆதித்யாராம் குரூப்பின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருக்கு சொந்தமானது.

தற்போது பிரத்யேகமாக ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் படங்கள் இங்கு படமாக்கப் பட்டு வருகின்றன. அந்த வகையில், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பு ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி வெற்றிகரமாக நடந்துவருகிறது அதுமட்டுமில்லாமல், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK 21, வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பும் ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டியில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது

கோப்ரா, சாணி காயிதம், மாஸ்டர், புலி, மெர்சல், தெறி போன்ற வெற்றிகளுடன், ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டி தென்னிந்தியா முழுவதிலும் இருந்து அதிக கவனத்தைப் பெற்று வருகிறது.  மேலும் பல கோலிவுட் blockbuster படங்களின் கண்கவர் செட்கள் ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டியில் தான் உருவாக்கப்பட்டன.

ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டி மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் மூலமாக திரைத்துறையில் ஆதித்யாராம் குரூப் தனக்கென்று ஒரு தனி சாம்ராஜியத்தை அமைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்கள் பலர் நடித்த பல பாக்ஸ்-ஆபீஸ் படங்களை இந்நிறுவனம் தயாரித்திருக்கிறது.தனது தனி தன்மையினால் ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.