இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் பும்ரா.தனது அசாத்திய பந்துவீச்சு திறமையால் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக சில வருடங்களிலேயே அவதரித்தார் பும்ரா.இந்திய அணி தற்போது இங்கிலாந்துடன் டெஸ்ட்,ஒரு நாள்,T20 உள்ளிட்டவை அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது.

முதல் மூன்று டெஸ்ட்களில் பங்கேற்ற பும்ரா,கடைசி டெஸ்ட் மற்றும் T20 போட்டிகளில் இருந்து விடுப்பு அழைக்கப்பட்டார்.இதற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் பலரும் குழம்பி வந்த நிலையில் பும்ரா தனது திருமணத்திற்காக விடுப்பு எடுத்துள்ளார் என்ற தகவல் தெரியவந்தது.இவர் யாரை திருமணம் செய்யப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்தனர்.

பிரபல மாடலும் , ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவியின் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவருமான தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் சஞ்சனா கணேசன்.ஐபி எல் குறித்த பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.குறிப்பாக கொல்கத்தாவின் கேகேஆர் அணி தொடர்பாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமானவர் சஞ்சனா கணேசன்.

பும்ராவிற்கும் சஞ்சனாவிற்கு கோவாவில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.இதுகுறித்த புகைப்படங்களை பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்ளைல் வைரலாகி வருகிறது.பும்ரா மற்றும் சஞ்சனாவிற்கு ரசிகர்களும்,பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.